கிறிஸ்தவ வாழ்க்கையில் பலருக்கும் தேவன் செய்த நன்மைகளை பிறருக்கு பகிரவே, அனுபவ சாட்சி என்ற பகுதியை வெளியிடுகிறோம். மேலே உள்ள அனுபவ சாட்சி என்ற ஐகானை கிளிக் செய்வதன் மூலம் இதுவரை வெளியிட்டுள்ள சாட்சிகளை நீங்கள் படிக்கலாம்.

……பூமியின் கடைசி பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். அப்போஸ்தலர்.1:8.

தேவன் நம் வாழ்க்கையில் தினமும் எவ்வளவோ, அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்கிறார். இதில் சில காரியங்கள் நமக்கு புத்தி புகட்டவும், சில காரியங்கள் மூலம் நம்மில் தேவனுடைய வல்லமையை விளங்க செய்யவும் தேவன் செய்கிறார்.

இவை மற்றவர்களுக்கு பயன்படவும், மாதிரியாகவும் இருக்கும் வகையில், அவற்றை இந்த இணையத்தளத்தின் மூலம் பகிரலாம். உங்கள் சாட்சிகளை arisenshine09@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பலாம்.

அதுபோல நம் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள், நம்மை சுற்றியுள்ளவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என பலருக்கும் மாதிரியாக தேவன் செய்திருக்கலாம். அதை நாம் அவர்களுக்கு சாட்சியாக அறிவிக்க வேண்டும்.

இன்னும் என்ன தாமதம்! உடனே உங்கள் சாட்சிகளை இ-மெயில் மூலம் எங்களுக்கு அனுப்புங்கள். இதற்கு எந்த கட்டணமோ, காணிக்கையோ வசூலிக்கப்படுவதில்லை.