0 1 min 1 week

திருநெல்வேலியை சேர்ந்த ஒரு சகோதரன் கூறியது…

உலகின் அக்கிரமத்திலும் பாவத்திலும் உழன்று திரிந்த எங்கள் குடும்பத்தை தேவன் ஏற்ற நேரத்தில் இரட்சித்து, அவரது அன்பின் கரத்தால் நடத்தி வருகிறார். பிற கோயில்களில் செருப்புகள் திருட்டு போவது போல, நாங்கள் செல்லும் தேவாலயத்திலும் விசுவாசிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதால், செருப்பு திருட்டு என்பது ஒரு வழக்கமான சம்பவமாக இருந்து வந்தது.

அதை கண்டு மனம் வருந்திய தேவ ஊழியர்கள், செருப்பு திருட தேவாலயத்திற்கு வரும் நபர்களை தேவன் இரட்சிக்க வேண்டும் என்று ஜெபித்து வந்தனர். இந்நிலையில் தேவாலயத்தில் சிறப்பு ஜெபக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதனால் ஏராளமான புதிய ஆத்துமாக்கள் வந்திருந்தனர்.

தேவாலயத்தின் வெளியே செல்லும் படிக்கட்டுகளின் ஓரத்தில் நான் அமர்ந்திருந்தேன். அப்போது புதியதாக வந்த ஒருவர், விலை மதிப்புள்ள ஷூ ஒன்றை வெளியே அவிழ்த்து வைத்துவிட்டு, கூட்டத்திற்குள் சென்றார்.

கொஞ்ச நேரத்திற்கு பிறகு, வேறொரு புதிய நபர் பழைய செருப்புகளை அணிந்து வந்திருந்தார். அங்கிருந்த எல்லா செருப்புகளையும் ஒரு முறை நோட்டமிட்ட அவர், தனது செருப்புகளை, அந்த விலை மதிப்புள்ள ஷூக்களின் அருகே விட்டு சென்றார்.

கூட்டத்திற்கு வந்திருந்த சிறப்பு செய்தியாளர் தேவ வசனத்தை போதித்து கொண்டிருந்த போது, ஏறக்குறைய 1 மணிநேரத்திற்கு பிறகு வெளியே வந்த அந்த பழைய செருப்பு அணிந்து வந்த நபர், மெதுவாக அந்த ஷூ-வை பார்த்து அதை தனது காலில் அணிந்து கொள்ள முயன்றார்.

ஒரு ஷூ அணிந்து, மற்றொன்றை அணிய அவர் முயற்சி செய்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், உரத்த சத்தத்தில் கத்திய அவர், இயேசு ஜீவிக்கிறார், உண்மையில் இயேசு ஜீவிக்கிறார். இயேசுவே என்னை மன்னியும், மன்னியும் என்று கத்திக் கொண்டே அந்த ஷூவையும், செருப்பும் விட்டுவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

அவரை பார்த்த எல்லாரும் ஆச்சரியமடைந்து, ஷூவை பார்த்தனர். அப்போது ஷூவில் இருந்து ஒரு தேள் வெளியே சென்றது. எனவே அந்த நபரை தேள் கடித்தது என்று எல்லாரும் அறிந்து கொண்டனர்.

அந்த சிறப்புக் கூட்டத்தின் கடைசி நாளில் தேவாலயத்திற்கு திரும்ப வந்த அந்த செருப்பு திருட முயன்ற நபர், தனது குற்றத்தை பொதுவாக கூறி மன்னிப்புக் கேட்டதோடு, இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார். இப்போது தேவாலயத்தில் ஒரு நல்ல விசுவாசியாக உள்ளார்.

அன்று அவர் செருப்பு திருடும் எண்ணத்தோடு தேவாலயத்திற்கு வந்தாலும், அவரை முன்பே கண்டிருந்த கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் சிக்கி கொண்டார். இன்று அவர், தனது மனதை இயேசுவிடம் பறிக் கொடுத்தவராக, அவரது வருகைக்காக காத்திருக்கிறார்.

தேவனுடைய அந்த கிரியையின் மூலம் ஏற்ற சமயத்தில் அவரது தவறு உணர்த்தப்பட்டதோடு, மற்றவர்கள் இடையே ஒரு தேவ பயமும் ஏற்பட்டது. அதன்பிறகு செருப்பு திருடும் ஆட்களின் எண்ணிக்கை அறவே குறைந்தது. தேவனுடைய கிரியைகள் அனைத்தும் ஆச்சரியமே, அதிசயமே!

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *