0 4 mths

பெங்களூரை சேர்ந்த ஒரு சகோதரி கூறுகிறார்…

நான் ஒரு இரட்சிக்கப்பட்ட கிறிஸ்துவக் குடும்பத்தை சேர்ந்த பெண். ஏழை குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு எளிய முறையில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஒரு வாடகை வீட்டில் எங்கள் குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக துவங்கினோம். மாதந்தோறும் எங்கள் தேவைகளை அதிசயமாக தேவன் வழிநடத்தி வந்தார்.

இந்நிலையில் தேவன் இரக்கமாக, நான் கர்ப்பமடைய உதவி செய்தார். பிரசவ காலம் நெருங்கிய நிலையில், மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகள் செய்ய கூட பணம் இல்லாமல் சிரமப்பட்டோம். தேவனை நோக்கி பார்த்த எங்கள் மனதில், என்ன செய்வது என்ற பயம் பற்றிக் கொண்டது.

கடைசியாக, எங்கள் வீட்டு உரிமையாளரிடம் கடனாக தற்போதைக்கு ரூ.500 அல்லது ரூ.1000 கேட்கலாம் என்று முடிவு செய்தோம். மனதில் மிகுந்த போராட்டத்தோடு, வீட்டு உரிமையாளரின் வீட்டுக்கு சென்றோம். அந்த நேரத்தில் அவர்களின் வீட்டுக்கு உறவினர்கள் வந்திருந்தார்கள். எனவே அவர்களை சிரமப்படுத்த வேண்டாம் என்று எண்ணி, ஜன்னலோரத்தில் காத்திருந்தோம்.

அவர்களின் வீட்டுக்கு வந்திருந்த உறவினர், எங்களை பார்த்து விட, உள்ளே வரும்படி அழைத்தனர். தயங்கி தயங்கி சென்ற எங்களிடம் என்ன விஷயம்? என்று கேட்டனர். வேறு வழியில்லாமல் நாங்கள் சென்ற விபரத்தை அவர்களிடம் கூறினோம். எங்களை அன்பாக விசாரித்த அவர்கள், உங்கள் மருத்துவ பரிசோதனைக்கு எவ்வளவு செலவாகும் என்று கேட்டனர்.

நாங்கள் ரூ.1000 இருந்தால் போதும், ஓரிரு மாதங்களில் திரும்பி கொடுத்து விடுகிறோம் என்றோம். அதை கேட்டு முகம் மலர்ந்த அவர்கள், எனக்கு நீ ஒரு மகள் மாதிரி. உனக்கு பரிசோதனைக்கு மட்டுமல்ல, பிரசவத்திற்கு ஆகும் எல்லா செலவுகளையும் நானே பார்த்துக் கொள்கிறேன் என்று எங்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

எதுவும் புரியாமல் ஆச்சரியத்தில் சென்ற எனக்கு, மருத்துவமனையில் பரிசோதனைகள் முதல் பிரசவம் வரை ஆன எல்லா செலவுகளையும், அதாவது சுமார் ரூ.15,000க்கும் மேலான மருத்துவ செலவுகள் முழுவதையும் அவர்களே கட்டினார்கள். நான் அவர்களுக்கு மிகுந்த நன்றி கூறி, தேவனையும் நன்றியுள்ள இருதயத்தோடு துதித்தேன்.

வெறும் ரூ.1000 கடன் கேட்க சென்ற எனக்கு, யார் என்றே தெரியாத ஒரு குடும்பம் ஆயிரக்கணக்கில் செலவு செய்தது. இது முழுக்க முழுக்க தேவனின் செயல் என்று நம்புகிறேன். எங்கள் வீட்டு உரிமையாளரிடம் கேட்டிருந்தால், அதிகபட்சமாக ரூ.500 அல்லது ரூ.1000 கிடைத்திருக்கும். அதையும் திரும்ப அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.

ஆனால் தேவன், அவர்களின் உறவினர்களோடு பேசி, நான் எதிர்பார்த்த பணத்திற்கும் மேலாக எனக்கு அளித்து எங்களை வழி நடத்தினார். தேவனை நோக்கி பார்த்த ஏழைகளான எங்களுக்கு, ஏற்ற நேரத்தில் எதிர்பார்ப்பிற்கும் மேலாக கிரியை செய்த தேவனை மீண்டும் நன்றியுள்ள இதயத்தோடு துதிக்கிறேன்.

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *