படித்தது! கேட்டது!! சிந்தித்தது!!!

“அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று” லூக்கா:1.4

இயேசு கிறிஸ்துவின் சரித்திரத்தை எழுத ஆரம்பித்த லூக்கா, மேற்கண்ட வார்த்தைகளை கூறுகிறார். அவர் இயேசுவை நேரில் பார்த்திராவிட்டாலும், அவரை குறித்து கேள்விப்பட்ட காரியங்களை தொகுத்து ஒரு சுவிசேஷமாக எழுதியுள்ளார். அவை நமக்கு இன்று ஆவிக்குரிய வளர்ச்சியை அளிக்கிறது.
இதேபோல நம் அன்றாட வாழ்க்கையில் அநேக காரியங்களை பார்க்கிறோம், படிக்கிறோம். பலரோடு பேசுகிறோம். அதில் சில காரியங்களை மிகவும் ரசிக்கிறோம். சிலவற்றை குறித்து அதிகமாக சிந்திக்கிறோம். சில காரியங்கள் நம் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு இடத்தை பிடித்து விடுகின்றன.
இந்த வகையில், www.arisenshine.in குழுவில் இணைந்து நாங்கள், பல சூழ்நிலைகளில் இருந்து வந்தவர்கள். எங்கள் வாழ்க்கையில் நடந்த பல காரியங்களை குறித்து எங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் போது, அவை உடன் இருப்போருக்கு ஆவிக்குரிய வளர்ச்சியை அளித்தன.
தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்திய சில சம்பவங்கள், நம் இணையதள வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது, அது அவர்களுக்கும் ஆவிக்குரிய வளர்ச்சியை அளிக்கும் என்று நம்புகிறோம்.
எனவே இந்த பகுதியில் வாசகர்களுக்கு ரசிக்கத்தக்க பல சம்பவங்களை வெளியிட வாஞ்சிக்கிறோம். கர்த்தர் தாமே உதவி செய்வாராக.

  • கிறிஸ்துவில் அன்பான சகோதரர்.