“……பூமியின் கடைசி பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.” அப்போஸ்தலர்.1:8.

“……பூமியின் கடைசி பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.” அப்போஸ்தலர்.1:8.


சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் கர்த்தராகிய இயேசு கூறிய இந்த வார்த்தைகள், இன்று நம் வாழ்க்கையில் நிறைவேற நமது இணையதளத்தின் மூலம் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. தேவன் நம் வாழ்க்கையில் தினமும் எவ்வளவோ, அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்கிறார்.
இதில் சில காரியங்கள் நமக்கு புத்தி புகட்டவும், சில காரியங்கள் மூலம் நம்மில் தேவனுடைய வல்லமையை விளங்க செய்யவும் தேவன் செய்கிறார். மேலும் சிலவற்றை மற்றவர்களுக்கு பயன்படவும், மாதிரியாகவும் இருக்கும் வகையில், நம் வாழ்க்கையில் தேவன் கிரியை செய்கிறார்.
பக்தன் யோபுவின் வாழ்க்கையில் தேவன் சோதனையை அனுமதித்து, பலருக்கும் மாதிரியாக வைத்துள்ளார். அதுபோல நம் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்கள், நம்மை சுற்றியுள்ளவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என பலருக்கும் மாதிரியாக தேவன் செய்திருக்கலாம். அதை நாம் அவர்களுக்கு சாட்சியாக அறிவிக்க வேண்டும்.
இந்நிலையில் “பூமியின் கடைசி பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் “என்ற வசனத்தின்படி, உங்கள் வாழ்க்கையில் செய்யப்பட்ட தேவனுடைய கிரியைகளை, உலகமெங்கும் உள்ள நம் இணையதள வாசகர்களுக்கு சாட்சியாக அறிவிக்க, இதோ உங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.
இன்னும் என்ன தாமதம்! உடனே உங்கள் சாட்சிகளை இ-மெயில் மூலம் எங்களுக்கு அனுப்புங்கள்.

  • கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.