Author: admin
நாம் பிறந்த வீட்டிலும், வளர்ந்த சபையிலிருந்து பிரிந்து, புதிய இடங்களுக்கு செல்லும் போது, பல புதிய காரியங்களை நம் வாழ்க்கையில் கற்றுக் கொள்ள முடியும் என்பதற்கு என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை ஆதாரமாக காட்ட முடியும். அதே நேரத்தில் புதிய சூழ்நிலைகளில், பல புதிய சோதனைகளும் வரும் என்பதால், நம் பரிசுத்தத்தை பாதுகாத்துக் கொள்ள…
“உயர ஏறும் மனுஷனுடைய ஆவியையும், தாழப் பூமியிலிறங்கும் மிருகங்களுடைய ஆவியையும் அறிகிறவன் யார்?” பிரசங்கி:3.21 உலகத்தையும், அதில் உள்ளவைகளையும் தனது வார்த்தையினால் தேவன் உருவாக்கினார் என்று பரிசுத்த வேதாகமம் துவங்குகிறது. அதன்பிறகு மனிதனை மண்ணில் இருந்து வடிவமைத்து, தேவன் உருவாக்கினார். மனுஷியை மனித எலும்பில் இருந்து படைத்தார். எனவே படைப்பிலேயே மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் வித்தியாசம் உண்டு…
தனது கீழ்படியாமை யாருக்கும் தெரியாது என்ற எண்ணத்தில் தான், யோனாவும் அயர்ந்து தூங்கினார். ஆனால் யோனாவிற்கு நஷ்டம் ஏற்படவில்லை என்றாலும், அவருடன் பயணித்த மற்ற அனைவருக்கும் நஷ்டம் ஏற்பட்டதாக காண்கிறோம். ஏனெனில் கப்பலுக்கு ஏற்படும் சேதத்தை தவிர்க்க, தங்களிடம் இருந்த சரக்குகளை கடலில் ஏறிந்துவிட்டு, ஒவ்வொருவரும் சொந்த தெய்வங்களை நோக்கி வேண்டுதல் செய்கிறார்கள் (யோனா:1.5).
நினிவே என்ற நகரத்தின் மிஞ்சிய பாவத்தைக் கண்டு, அதை அழிக்க நினைத்த தேவன், அது குறித்து எச்சரிக்க, தீர்க்கத்தரிசி யோனாவை அங்கு செல்லுமாறு கூறுகிறார். ஏனெனில் தான் செய்த பாவத்தில் மனிதன் அழிந்து போவதைத் தேவன் ஒருநாளும் விரும்புவது இல்லை.
யோனா கூறும் சத்தியங்கள் – 1 “அதற்கு அவன்: நான் எபிரெயன். சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன் என்றான்.” யோனா:1.9 பரிசுத்த வேதாகத்தில் உள்ள ஒவ்வொரு நபரை முன்னிறுத்தியும், பல சத்தியங்கள் உரைக்கப்பட்டுள்ளது. இதில் சாதாரண குடிமக்கள் முதல் ராஜக்குலத்தைச் சேர்ந்தவர்கள் வரை உட்படுகிறார்கள். ஆனால் ஒரு நாட்டில் உள்ள…
சில நாட்களுக்கு முன்பு, எதிர்பாராத வகையில் புத்தகம் ஒன்றை படிக்க நேர்ந்தது. அதில் வந்த ஒரு கதை என்னை மிகவும் யோசிக்க வைத்தது. இன்றைய கிறிஸ்தவர்களிடையே காணப்படும் பொதுவான சந்தேகங்களில் ஒன்று என்னவென்றால், நாம் பாவம் செய்ய முழு காரணமாக இருக்கும் பிசாசை, தேவன் அழிக்காமல் விட்டுள்ளது ஏன்? என்பதாகும். ஒரு சாதாரண கிறிஸ்தவனான எனக்கும்…
நான் சண்டே ஸ்கூல் படிக்கும் போது, நடந்த ஒரு சம்பவம், எனக்கு அடிக்கடி ஞாபகத்திற்கு வருவதுண்டு. அதை குறித்து பலரிடமும் பகிர்ந்துள்ளேன். அந்த காரியத்தை தற்போது இணையதள வாசகர்களிடமும் பகிர்ந்து கொள்ள வாஞ்சிக்கிறேன். கேட்டது… ஞாயிறு பள்ளியில் எனது வாத்தியார் எங்களுக்கு பாடம் எடுக்கும் முன் கடந்த வாரத்தை குறித்து கேட்பது வழக்கம். இந்நிலையில் ஒரு…
சமீபத்தில் ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த செய்தியை அறிந்து, அவரை நலம் விசாரிப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் ஒரு கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்தார். அவரை சுற்றிலும் இருந்த பல இயந்திரங்கள், “பீப் பீப்” என்ற மெல்லிய ஒலியை எழுப்பியபடி, அவரது உடல்நிலையை குறித்த தகவல்களை காட்டிக் கொண்டிருந்தது. அவரிடம் விசாரிக்க…
எனது சிறு வயதில் மிகவும் குறும்பு செய்து கொண்டிருந்தேன். எனது பள்ளிப் பருவத்திலேயே, பெற்றோர் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டிருந்தனர். இதனால் தேவாயலத்திற்கு பெற்றோருடன் சென்று வருவேன். அங்கேயும், சிறுவர்களுடன் பேசிக் கொண்டிருப்பது, கூட்ட நேரத்தில் விளையாடுவது, அங்குமிங்கும் ஓடுவது என்று எனது குறுப்புத்தனம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்தது. பாஸ்டர்களும், விசுவாசிகளும் எவ்வளவோ…
“அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்தில் இல்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்;…என்று சொல்லி.” அப்போஸ்தலர்:3.6 தேவாலயத்திற்கு வந்த பேதுருவையும், யோவானையும் பார்த்து, பிச்சை கேட்ட ஒரு சப்பாணியைப் பார்த்து மேற்கூறிய வசனத்தை பேதுரு கூறுகிறார். ஏனெனில் சப்பாணிக்கு தற்காலிக சந்தோஷத்தை அளிக்கும் சில்லரை பணம் பேதுருவிடம் இருக்கவில்லை. ஆனால் அவன் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியாக வாழ…