மைசூரை சேர்ந்த சகோதரன் கூறுகிறார்…
நான் கிறிஸ்துவை ஏற்று கொண்ட நாள் முதல் என் வாழ்க்கையின் சிறிதும், பெரிதுமான எல்லா
தேவைகளையும் கர்த்தர் சந்தித்து வருகிறார். எனக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தையை
தேவன் கொடுத்தார். அவளை பள்ளியில் சேர்ப்பது குறித்து குடும்பமாக ஜெபித்து வந்தோம்.
குழந்தையின் அட்மிஷனுக்காக பல இடங்களில் விசாரித்த போது, கர்நாடக அரசின் right to
education என்ற திட்டத்தை குறித்து கேள்விப்பட்டேன். அந்த திட்டத்தின் மூலம் நமக்கு அருகில்
உள்ள English Medium பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்து இலவசமாக படிக்க வைக்க முடியும்.
எனவே அதற்காக ஜெபித்துவிட்டு, கடந்த ஜனவரி 22ம் தேதி அதற்குரிய விண்ணப்பத்தை பூர்த்தி
செய்து கொடுத்தேன்.
அதற்கான ரசீது வந்த போது, லட்சக்கணக்கான குழந்தைகள் அதற்காக விண்ணப்பித்து இருப்பது
தெரியவந்தது. நான் அப்ளிகேஷன் அளித்துள்ள பள்ளியில் மட்டும் 250க்கும் மேற்பட்டோர்,
என்னை போல விண்ணபித்து இருந்தனர். அவர்களில் 20 பேருக்கு மட்டுமே மேற்கூறிய இலவச
கல்வி கிடைக்க வாய்ப்புள்ளது. இதை கேள்விப்பட்ட நாங்கள், குழந்தையின் ரசீதை வைத்து
தினமும் ஜெபித்து வந்தோம். என் மகளும் தினமும் ஜெபித்தாள்.
குழந்தையை தந்த தேவனே, அவளை படிக்க வைக்க தேவையான காரியங்களையும் நீரே
பொறுப்பேற்க வேண்டுமே! உமக்கு சித்தமானால் குழந்தைக்கு அட்மிஷன் கிடைக்க செய்யும்
என்று ஜெபித்து வந்தோம். ஏப்ரல் 1ம் தேதி முதல் குலுக்கல் நடத்தப்பட்டது. அதில் எங்கள்
பிள்ளையின் பெயர் இடம் பெறாததை கண்டு மனவருந்தினோம்.
ஆனால் தேவன் சகலத்தையும் அறிந்திருக்கிறார் என்று மனதை தேற்றிக் கொண்டு, ஸ்தோத்திரம்
செய்துவிட்டு அதை மறந்துவிட்டோம். இந்நிலையில் ஏப்ரல் 22ம் தேதி 2ம் முறை குலுக்கல்
நடத்தப்பட்டது. அதில் என் மகளின் பெயர் இடம் பெற்றிருந்தது. இதில் மகிழ்ச்சியடைந்த
நாங்கள், நன்றியுள்ள இதயத்தோடு கர்த்தரை துதித்தோம். என் மகளுக்கு கிடைத்திருக்கும்
பள்ளியில் சாதாரண அட்மிஷனில் சேர்ந்தால், LKG அட்மிஷனுக்கு 60 ஆயிரமும், மாதந்தோறும் 4
ஆயிரம் வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த அட்மிஷன் மூலம் LKG முதல் 8ம் வகுப்பு வரை
என் மகளுக்கு எந்த கட்டணமும் இல்லாமல் படிக்க தேவன் வழிவகை செய்தார்.
தேவன் தமது மக்களுக்காக சிறியதும், பெரியதுமான எல்லா நன்மைகளையும் செய்கிறார்
என்பதற்கு என்னை சாட்சியாக நிறுத்தியதை எண்ணி கர்த்தரை நன்றியுள்ள இதயத்தோடு
துதிக்கிறேன்.

By admin