சமீபத்தில் ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அந்த செய்தியை அறிந்து, அவரை நலம் விசாரிப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றிருந்தேன்.
அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் ஒரு கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்தார்.
அவரை சுற்றிலும் இருந்த பல இயந்திரங்கள், “பீப் பீப்” என்ற மெல்லிய ஒலியை எழுப்பியபடி,
அவரது உடல்நிலையை குறித்த தகவல்களை காட்டிக் கொண்டிருந்தது. அவரிடம் விசாரிக்க
சென்ற போது, அவர் பேச முடியாதபடி, அவருக்கு ஆக்ஸிஜன் கவசம் பொறுத்தப்பட்டிருந்தது.
மேலோட்டமாக அவருக்கு சைகையை காட்டிவிட்டு, வெளியே வந்த நான், அவரது
குடும்பத்தினரிடம் விசாரித்தேன். அவரது உடல்நலத்தை குறித்து விளக்கிய அவர்கள்,
மருத்துவமனையில் ஏற்பட்ட செலவுகளை பற்றி கூறினார்கள். அவருக்கு அளிக்கப்பட்டுள்ள
ஆக்ஸிஜனுக்கு மட்டும், தினமும் பல ஆயிரம் ரூபாய்கள் செலவு செய்வதாக கூறினர்.
அவர்களை ஆறுதல்படுத்திவிட்டு மருத்துவமனையில் இருந்து கனத்த மனதோடு
வெளியேறினேன். அதை குறித்து யோசித்துக் கொண்டிருந்த போது, தேவன் ஒரு சிந்தனையை
என் இருதயத்தில் தந்தார்.

  • கிறிஸ்துவிற்குள் அன்பான சகோதரர்.


சிந்தித்தது:
ஒரு மனிதனுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட ஒரு நாளுக்கான ஆக்ஸிஜனுக்கு, பல ஆயிரம்
ரூபாய்கள் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் நாம் பிறந்தது முதல் தேவன் நமக்கு
தேவையான ஆக்ஸிஜனை இலவசமாக அளித்துள்ளாரே!
நோயாளி ஒருவரை தகுந்த சூழ்நிலையில் வைத்து பார்த்துக் கொள்ள மருத்துவமனையில் உள்ள
மற்ற மனிதருக்கு பல ஆயிரம் ரூபாய்கள் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் தேவன் நமக்கு
தகுந்த இயற்கை சூழ்நிலையை இந்த உலகில் அளித்துள்ளாரே! மனிதனை போல தேவனும்,
நம்மிடம் மேற்கூறியவைகளுக்கு கணக்கு கேட்டால், நாம் என்ன பதில் சொல்ல முடியும்?
அவர் செய்யும் நன்மைகளுக்கு தகுந்த நன்றியுள்ள இருதயம் நமக்கு இருக்கிறதா? தேவன் எனக்கு
எந்த நன்மையும் செய்யவில்லை என்று சிலர் கூறுவதை கேட்டிருக்கிறேன். உண்மையில் தேவன்
நமக்காக யாவையும் செய்து முடித்துள்ளார். அதனால் தான் நாம் நன்றாக வாழ முடிகிறது.
எனவே தேவன் செய்த எல்லா நன்மைகளையும் நினைத்து பார்த்து எப்போதும் அவரை துதித்துக்
கொண்டே இருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கு எப்படி?

By admin