0 1 min 3 mths

இசக்கார் இரண்டு பொதியின் நடுவே படுத்துக் கொண்டிருக்கிற பலத்த கழுதை. ஆதியாகமம்.49:14

ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்ற முற்பிதாக்களின் வரிசையில் மூன்றாவதாக வரும் யாக்கோபு மரண நாட்களை நெருங்கிய போது, தனது 12 மகன்களையும் அழைத்து, அவர்களை குறித்து தீர்க்கத்தரிசனம் கூறினார். அப்போது இசக்காரை குறித்து கூறியதை தான் நாம் மேலே காண்கிறோம்.

இசாக்கரை குறித்தும், யாக்கோபை குறித்தும் வேதத்தில் அநேக காரியங்களை படிக்க முடிகிறது. ஆனால் இந்த வசனத்தில் இசக்காருக்கு உவமையாக காட்டப்பட்டுள்ள மிருகமான கழுதையை குறித்தும், அது எப்படி நம் ஆவிக்குரிய நிலைக்கு நிழலாக வருகிறது என்பதை குறித்தும் அறிந்து கொள்ளுவது, நமது ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உதவும் என்று நம்புகிறோம்.

இயற்கையில் பார்ப்பதற்கு அழகும், வேகமாக ஓடக் கூடியதுமான குதிரைகளை விட, கழுதைகள் அதிக சுமையை சுமக்கும் திறன் கொண்டவை. முன் காலத்தில் கழுதைகள் பொதிகளை (சுமைகளை) சுமக்கவும், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வாகனமாகவும் பயன்படுத்தப்பட்டது என்பதை வரலாற்றை புரட்டினால் அறியலாம். இன்று இயந்திர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், கழுதைகளை பயன்படுத்துவது அரிதாகிவிட்டது.

இன்றைய காலத்தில் “கழுதை” என்ற வார்த்தையை, மற்றவர்களை கேவலமாக திட்டுவதற்கு மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பரிசுத்த வேதாகமத்தில் இடம் பெற்றுள்ள பல மிருகங்களில் கழுதை முக்கிய இடத்தை பெற்றுள்ளது. ஏனெனில் வேதத்தில் பேசிய மிருகம் என்ற சிறப்பை பெற்ற ஒரே மிருகம் இந்த கழுதை மட்டுமே.

எனவே கழுதையை குறித்து வேதத்தில் இடம் பெற்றுள்ள ஒரு சில சம்பவங்களையும், அது தொடர்பாக நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஆவிக்குரிய சத்தியங்களை குறித்தும் தொடர்ந்து ஒவ்வொரு பாகங்களாக பார்ப்போம்.

(பகுதி – 2 தொடரும்)

Spread the Gospel

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *